இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்னும் சில நொடிகளில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் மெத்தியுஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. 

இலங்கை தொடரை கைப்பற்றியிருருந்தாலும், ஆஸி அணியை “வைட் வொஷ்” செய்து வரலாறு படைக்கும் நோக்கத்தில் களமிறங்கவுள்ளது.

ஆஸி அணி தொடரை இழந்திருந்தாலும், டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் களமிறங்கும் அணி விபரம்

இலங்கை அணி

கருணாரத்ன கௌசல் சில்வா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், மெத்தியுவ்ஸ், சந்திமால், தனஞசய டி சில்வா, டில்ருவான் பெரேரா,ஹேரத், சந்தகன்,லக்மால்

ஆஸி அணி

வோர்னர், சோன் மாஷ், சுமித், வோஜஸ், ஹென்ரிக்கியுஸ், பீட்டர் நெவில், மிச்சல் ஸ்டார்க், ஹெஷல்வுட், லயோன், ஹொல்லன்ட்