இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் வீதி விபத்துகளில் சிக்கிய 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் மாத்திரம் பதிவான வீதி விபத்துக்களில் சிக்கி 11 பேர் உயிரிழந்தாகவும், மற்றைய நால்வர் முன்னதாக ஏற்பட்ட விபத்துக்களில் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் நாடு முழுவதும் 120 க்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளது. அதில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.