ஈஸ்டர் தாக்குதல் குறித்த அமைச்சரவை உபகுழு அறிக்கை மார்ச் 15 ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது

Published By: Vishnu

05 Mar, 2021 | 08:56 AM
image

(ஆர்.யசி)

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இம்மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் நிச்சயமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை உபகுழு தெரிவிக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு நேற்று முன்தினம் மூன்றாவது தடவையாகவும் கூடியது. 

ஏற்கனவே அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதான குற்றவாளிகள் எவரும் அடையாளப்படுத்தப்படாது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச அதிகாரிகள் ஒருசிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் இறுதியாக கூடிய குழுவின் தீர்மானங்கள் குறித்து அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் வினவியபோது அவர் கூறுகையில்,

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் எமக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை. அறிக்கையை நாம் தயாரிக்கவில்லை. அதேபோல் இந்த ஆணைக்குழு எமது ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஒன்றும் அல்ல. 

முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் உண்மைகளை கண்டறிய நியமிக்கப்பட்ட ஒன்றாகும். அவ்வாறு இருக்கையில் இப்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவும், அதேபோல் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முன்னர் ஜனாதிபதிக்கு ஒரு சாரம்சத்தை பெற்றுக்கொடுக்கவும்,அரசாங்கமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து ஆராயவுமே அமைச்சரவை உப குழுவாக எம்மை நியமித்துள்ளனர். எமக்கு கொடுத்துள்ள பணிகளை நாம் நிறைவுசெய்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47