குருணாகல் - கண்டி பிரதான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் படுகாயமடைந்து குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகல் நகர எல்லைக்குள் ,மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .

குருணாகல் நகரில் இருந்து தினமும் கொழும்புக்கு ரயிலில் தொழிலுக்குச் செல்லும் மூவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் . இச் சம்பவத்தில் இரு ஆண்களும் ஒரு பெண்ணுமே காயமடைந்தவர்களாவர்.

வேகமாக மாவத்த்கம நகரில் இருந்து வந்த இருவர் மல்லவபிட்டிய பள்ளிக்கு  அருகிலுள்ள  கட்டுப்பிட்டி பாதையில் இருந்து வந்து திரும்பிய உந்துருளியில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மூவரும் கடும் காயங்களுக்குள்ளாகி இருப்பதாக குருணாகல் போதனா வைத்தியசாலை தகவல்  மூலம் அறியக் கிடைத்துள்ளது .

இச் சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .