வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிசார் நேற்று (4) மீட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் நேற்றையதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவன் வீடு சென்றிருப்பார் என்ற எண்ணத்தில் குறித்தபெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.
எனினும் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் பெற்றோர்கள் உறவினர்களால் தேடுதல் நடாத்தப்பட்டது.
இதன்போது குறித்த சிறுவன் வயல்பகுதியில் விழுந்து கிடப்பதை அவதானித்த பெற்றோர்கள் அவனை உடனடியாக மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் குறித்த சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னரே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மருதமடுவ பகுதியை சேர்ந்த வீரசிறி தேனுகருக்சான் என்ற 7வயது சிறுவனே மரணமடைந்துள்ளான். பாம்பு தீண்டி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM