பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கொரோனா தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தியுள்ளது.

No description available.

கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்று விளையாடும் 6 வீரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளப்படுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த தொடரை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No description available.

இதேவேளை, பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது

அந்தவகையில், முதலாவதாக கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும் கிரிக்கெட் சபையாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளங்குகின்றது.