பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நேற்றிரவு 9.30 மணியளவில் சீனா சென்றுள்ளார்.

யுஎல்188 என்ற விமானத்தில் 17 பிரதிநிதிகளுடன் பிரதமர் பயணமானார்.

இந்தப் பயணத்தின் போது, சீனாவின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள சில கைத்தொழில் வலயங்கள், கொள்கலன் முனையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நிலையங்கள், படைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பொருளாதார அபிவிருத்தி இடங்களை அவர் பார்வையிடவுள்ளார்.

பிரதமரட எதிர்வரும் 17ஆம் நாள் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்.

இதற்கிடையே  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவும், அடுத்த மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.