நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் உசாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண், கிரிவுள்ள பகுதியைச் சேர்ந்த 78 வயது பெண், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆண், மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் மற்றும் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண் ஆகியோரே இறுதியாக கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 489 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.