14 நாட்களுக்குள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு விளையாட்டுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்திர சேனாநாயக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட  2 ஆவது நாள் விசாரணையின் போதே அவருக்கு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.