(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று வியாழக்கிழமை இரவு 9.30 மணி வரை 351 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 84 577 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 80 836 பேர் குணமடைந்துள்ளதோடு 3110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று புதன்கிழமை மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியதுடன் இன்று 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. அதற்கமைய மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 489 ஆக உயர்வடைந்துள்ளது. 

நேற்றையதினம் பதிவான கொரோனா மரணமானது ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண்னொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.