மைலோவின் ஊக்குவிப்பு பிரச்சார வெற்றியாளர்களுக்கு தொலைக்கல்விக்கு உதவ மடிக்கணனிகள், டெப் சாதனங்கள், றீலோட்கள் மற்றும் பலவற்றை கல்வி அமைச்சர் அன்பளித்துள்ளார். 

சிறுவர்களுக்கு தொலைக்கல்வி அடிப்படையில் கற்பதற்கும், உடற்பயிற்சிகளை முன்னெடுப்பதற்கும் உதவும் வகையில் மைலோ வர்த்தக நாமம் முன்னெடுத்து வருகின்ற ஊக்குவிப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் மைலோவின் ஊக்குவிப்பு பிரச்சார வெற்றியாளர்களுக்கு மடிக்கணனிகள், டெப் சாதனங்கள், றீலோட்கள் மற்றும் பலவற்றை கல்வி அமைச்சர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 

மைலோ தனது அண்மைய ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின் மூலமாக தற்போது பரவி வருகின்ற தொற்றுநோய் காரணமாக அநேகமாக அனைத்து சிறுவர்களும் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கி, வீடுகளுக்கு வெளியில் நேரத்தைச் செலவிடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு தொலைக்கல்வி அடிப்படையில் கற்பதற்கும், உடற்பயிற்சிகளை முன்னெடுப்பதற்கும் உதவும் வகையில் மொத்தமாக 10,000 சிறுவர்களுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான மடிக்கணனிகள், டெப் சாதனங்கள், றீலோட்கள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், ஸ்கேட்போர்டுகள், கூடைப்பந்துகள், உதைபந்துகள், கயிறடித்தல் கயிறுகள், ஹெட்செட்டுகள் மற்றும் பாடசாலைப் புத்தகப்பைகளை வழங்கவுள்ளது. 

2021 பெப்ரவரி 18 முதல் 2021 ஏப்ரல் 18 வரையான காலப்பகுதியில் குலுக்கல் சீட்டிழுப்புக்கள் மூலமாக வாரந்தோறும் 1000 சிறுவர்களுக்கு இந்த வர்த்தகநாமத்தின் அன்பளிப்புக்கள் கிடைக்கப்பெறவுள்ளன. 

இது தொடர்பான மேலதிக தகவல் விபரங்களை @MiloSriLanka முகநூல் பக்கத்தின் மூலமாக அறிந்துக் கொள்ளமுடியும். 

“மைலோ வர்த்தகநாமமானது எமது நுகர்வோரை ஊட்டச்சத்துடன் வளப்படுத்தி வாழ்க்கையில் மேலும் முன்னேறுவதற்கு இடமளித்து வருகின்றது. 

உடற்பயிற்சிகளை முன்னெடுப்பதை ஆதரித்தும், ஊக்குவித்தும் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை முறையை அவர்கள் முன்னெடுப்பதற்கு உதவுவது இதில் முக்கியமான ஒரு அங்கமாகக் காணப்பட்டாலும், இந்த ஆண்டில் மற்றுமொரு படி மேலே செல்வதற்கு நாம் விரும்பினோம். 

தொலைக்கல்வி மற்றும் ஒன்லைன் கற்றல் வகுப்புக்கள் தொடர்பில் எத்தனையோ குடும்பங்களின் இன்னல்களை நாம் அறியப்பெற்றோம். 

குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் போதுமான சாதனங்கள் அல்லது தரவு இல்லாமை காரணமாக அவர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

மேலும், தமது பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே சென்று விளையாட முடியாமை மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமை தொடர்பில் பெற்றோர் கவலை கொண்டுள்ளதையும் நாம் அறிந்துள்ளோம். 

எனவே, ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஊக்குவிப்பு பிரச்சாரம், பிள்ளைகள் தமது வாழ்வில் மேலும் முன்னேற உதவ பெற்றோருக்கு தேவைப்படுகின்ற வளங்களை வழங்கி, அவர்களுக்கு உதவ நாம் மேற்கொண்டுள்ள தனித்துவமான ஒரு அணுகுமுறையாகும்” என்று மைலோ உற்பத்திப்பிரிவின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான மொஹமட் அலி அவர்கள் குறிப்பிட்டார்.