-கபில்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணிக்குப் பின்னர், தமிழ் மக்கள் மீதான உளவியல் போர் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

இந்தப் பேரணியில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களுக்கு எதிராக கடந்த வாரங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

பேரணியின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம், ஒரே நேரத்தில் 8 பொலிஸ் நிலையங்களில் இருந்து சென்ற பொலிஸார், விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர்.

அதுபோல, பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஒன்றுக்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டனர். வடக்கிலும், கிழக்கிலும் உள்ள நீதிமன்றங்களில், பேரணி சென்ற பாதையில் இருந்த பொலிஸ் நிலையங்களால் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்கள் மட்டும் இந்தப் பேரணிக்கு தடைவிதிக்க மறுத்திருந்தன.

ஏனைய நீதிமன்றங்களில் பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றிருந்தபோதும், பேரணியில் சென்றவர்களுக்கு அதனை வாசித்துக் காட்டி எச்சரித்தபோதும், பேரணியில் சென்றவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

உண்மையான ஒரு எழுச்சிப் பேரணியில், பொலிஸாரின் தடைகள், நீதிமன்றங்களின் தடைகள் மாத்திரமன்றி, இராணுவத்தின் துப்பாக்கிகளும்கூட தடையை ஏற்படுத்த முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நீதிமன்றங்களில் அரசியல் காரணங்களால்தான் பொலிஸார் தடை உத்தரவுகளைப் பெற்றனரே தவிர, அவர்கள் நீதிமன்றத்துக்கு உண்மையான காரணத்தை முன்வைக்கவில்லை.

இந்தப் பேரணியைத் தடுப்பதில் அரசாங்கம் முழுக் கவனத்தையும் செலுத்தியதாக கூற முடியாது. ஏனென்றால், அரசாங்கம் நினைத்திருந்தால் தனது படைகளைக் குவித்து, மாவீரர் நாள், போன்ற நினைவேந்தல்களைத் தடுப்பதற்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளைப்போல, இதனையும் தடுக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.

ஆனால், அவ்வாறான முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கவில்லை. ஜனநாயகப் போராட்டங்களைத் தடுக்க அரசாங்கம் விரும்பினாலும், அதனை முழுமையாக தடுப்பது, சர்வதேச அளவில் அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே, அதற்குக் காரணம்.

குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் சூழலில், இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அது அரசாங்கத்துக்கு எதிரான மிகப்பெரிய பிரசாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/