ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட்

Published By: Vishnu

04 Mar, 2021 | 09:21 AM
image

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரான் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

அதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டாரான சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.

இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் 132 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாடி வந்தபோது, ஆறாவது ஓவருக்காக அகில தனஞ்சய பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

அந்த ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசித் தள்ளி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இதனால் டி-20 கிரிக்கெட் அரங்கில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேனாக திகழந்த முன்னாள் இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங்குடன் பொல்லார்ட் இணைந்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், தென்னாபிரிக்காவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ் தான் இந்த சாதனையை முதலில் பெற்றார்.

அதன்படி 2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை கிப்ஸ் நிகழ்த்திக் காட்டினார்.

அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச டி-20 உலகக் கிண்ணத்தின் தொடக்கப் பதிப்பில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சை எதிர்கொண்டு, ஒரு ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசித் தள்ளி டி-20 கிரிக்கெட் அரங்கில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில்...

2025-04-24 05:16:31
news-image

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மீண்டும்...

2025-04-24 05:12:04
news-image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறைமையை ...

2025-04-23 21:08:04
news-image

லக்னோவை இலகுவாக வென்றது டெல்ஹி; ஐபிஎல்...

2025-04-23 00:17:02
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேசிய உயர் செயல்திறன்...

2025-04-22 22:04:03
news-image

ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ் சம்பியனானார் ஒஸ்டாபென்கோ

2025-04-22 12:19:32
news-image

கொல்கத்தாவை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் 39...

2025-04-22 00:30:24
news-image

ஆசிய 22 வயதின்கீழ், இளையோர் குத்துச்சண்டை...

2025-04-21 15:26:36
news-image

மத்தியஸ்தரின் தீர்ப்பை மறுக்கும் வகையில் பந்து...

2025-04-21 15:21:09
news-image

கோஹ்லி, படிக்கல் அபார அரைச் சதங்கள்...

2025-04-21 01:05:03
news-image

சென்னை சுப்பர் கிங்ஸை துவம்சம் செய்தது...

2025-04-21 01:02:12
news-image

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு...

2025-04-21 00:58:52