பேராதெனிய பல்கலைக்கழக நிபர்ணர்களினால் தயாரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் உலகின் முதல் புதிய முகக் கவசங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் குறித்த முககக் கவசத்தை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக கூறினார்.

அதேநேரம் இந்த முகக் கவசங்களை சர்வதேச சந்தைக்கு வெளியிடுவதற்காக தூதரகங்களுடன் கலந்துரையாட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டாலும் பொதுமக்கள் அவசியம் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.