(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 484 ஆக உயர்வடைந்துள்ளதோடு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்துள்ளது. 

இன்று புதன்கிழமை இரவு 9.30  மணி வரை 305 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 84 205  ஆக அதிகரித்தது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 80 437 பேர் குணமடைந்துள்ளதோடு , 3155 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று செவ்வாய்கிழமை மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்ததுடன் இன்றையதினம் ஒரு கொரோனா மரணம் பதிவாகியிருந்த்து. அதற்கமைய மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் கொழும்பு 15 ஐ சேர்ந்த 87 வயதுடைய பெண்னொருவர் கடந்த  முதலாம் திகதி கொவிட் நிமோனியா, தீவிர நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 5 ஐ சேர்ந்த 89 வயதுடைய பெண்னொருவர் கடந்த முதலாம் திகதி கொவிட் நிமோனியா, தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 ஐ சேர்ந்த 78 வயதுடைய பெண்னொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி கொவிட் நிமோனியா , நீரழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தல பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி கொவிட் நிமோனியா , சுவாசத்தொகுதி செயழிலந்தமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

பிலிமதலாவ பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண்னொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி தீவிர கொவிட் நிமோனியா , உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் நுரையீரல் புற்றுநோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.