கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் தாயார் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் குதித்த நிலையில் தாயார் மாத்திரம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஏனைய மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

இதன்போது எட்டு வயது, ஐந்து வயது, இரண்டு வயதுடைய ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறியமுடிகின்றது.
கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்ற போதிலும் மீட்கப்பட்ட பெண் பதில் ஏதும் கூற மறுப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுவர்கள் அணிந்து சென்ற பாதணிகள் மற்றும் தொப்பி என்பன கிணற்றுக்கு அருகில் காணப்படுகின்றனமை குறிப்பிடத்தக்கது.