இங்கிலாந்துடனான 4 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின்  அஷாட் சபீக் தனது 9 ஆவது டெஸ்ட் சதத்தை கடந்து ஆட்டமிழந்துள்ளார்.

அஷாட் சபீக்  2 ஆறு ஓட்டங்கள் 12 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 179 பந்துகளில் 109 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  328 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்திருந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக பெயார்ஸ்டோவ் 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான்  4 விக்கட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.