புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஹ்மத் கிராமம் பிரதேசத்தில் விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதலின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.