இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது மார்ச் 03 ஆம் திகதி ஆன்டிகுவாவில் அமைந்துள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் அந் நாட்டு நேரப்படி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

(இலங்கை நேரம் மார்ச் 04 அதிகாலை 3:30 மணி - 10:00 PM GMT)

2020 மார்ச் மாதத்திற்கு பின்னர் இரு அணிகளும் ஆடுகளத்தில் ஒருவரையொருவர் எதிர்த்தாடும் முதல் போட்டி இதுவாகும்.

இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்துக்கான முன்னேடிப் போட்டியாகவும் இது இரு அணிகளுக்கும் அமைந்துள்ளது.

 

மேற்கிந்தியத்தீவுகள்

2020 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வென்றது. எனினும் நவம்பரில் நியூஸிலாந்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட  டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் கோட்டை விட்டது.

இந் நிலையில் இன்று ஆரம்பமாகவுள்ள டி-20 ஐ தொடரில் புதிய தொடக்கத்தை எடுக்க அணித் தலைவர் கிரன் பொல்லார்ட் தயாராக உள்ளார். 

கிறிஸ் கெய்ல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலான இடைவெளியின் பின்னர் கரீபியன் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோன்று டுவைன் பிராவோ நியூசிலாந்தில் சுற்றுப் பயணத் தொடரை இழந்ததான் பின்னர் டி-20 ஐ அணிக்கு திரும்பியுள்ளார். 

மேலும், 39 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் அணியின் ஆச்சரியமான அழைப்பினை பெற்றுள்ளார்.

தற்போதைய டி-20 மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பந்துவீச்சு சிறிய பலவீனமான புள்ளியாக இருந்தாலும், மேற்கிந்தியதீவுகள் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்த போதுமான சக்திவாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளன.

Full Squad

Kieron Pollard (C), Nicholas Pooran (vc), Fabien Allen, Dwayne Bravo, Fidel Edwards, Andre Fletcher, Chris Gayle, Jason Holder, Akeal Hosein, Evin Lewis, Obed McCoy, Rovman Powell, Lendl Simmons, Kevin Sinclair.

இலங்கை

கரீபியன் அணிக்கு எதிரான உள்நாட்டு டி-20 ஐ தொடரில் 2:0 என்ற தோல்வியை சந்தித்த இலங்கை 2020 மார்ச் மாதத்திற்கு பின்னர் இருபதுக்கு : 20 போட்டியில் களம் காணுகிறது.

இந்த தொடருக்கான டி-20  இலங்கை அணியின் தலைவராக தாசுன் ஷானக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், விசா பிரச்சினைகள் காரணமாக அவர் மேற்கிந்தியத்தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தை தவறவிட்டமையினால் அந்த பொறுப்பு அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் அஞ்சலோ மெத்தியூஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஷானக கரீபியனில் தரையிறங்கும் வரை மெத்தியூஸ் டி-20  அணியை வழிநடத்துவார்.

மெத்தியூஸைத் தவிர, சுரங்கா லக்மல், திசார பெரேரா, தினேஷ் சந்திமல், நிரோஷன் திக்வெல்லா போன்ற அனுபவமிக்க வீரர்களும் அணியில் உள்ளனர்.

Full Squad

Angelo Mathews (stand-in captain in case of absence Dasun Shanaka), Dasun Shanaka (C), Dimuth Karunaratne, Danushka Gunathilake, Pathum Nissanka, Ashen Bandara, Oshada Fernando, Dinesh Chandimal, Niroshan Dickwella, Thisara Perera, Kamindu Mendis, Wanindu Hasaranga, Ramesh Mendis, Nuwan Pradeep, Asitha Fernando, Dushmantha Chameera, Akila Dananajaya, Lakshan Sandakan, Dilshan Madushanka, Suranga Lakmal.