-சத்ரியன்

“12 ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் வெற்றி கொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. 12 ஆண்டுகளுக்குப் பின்னரும், பிரபாகரனின் படங்களுக்குக்கூட அஞ்சுகின்ற நிலையில்தான் அரசாங்கம் இருக்கிறது”

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா பொதுச்செயலர் அந்தோனியோ குட்டரெஸ், இலங்கை குறித்தோ வேறு நாடுகள் குறித்தோ தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை.

ஆனால், அவர் தனது உரையில் குறிப்பிட்ட பெரும்பாலான விடயங்களில் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள், சூழல் மற்றும் அதனைச் சார்ந்த நெருக்கடிகளை பிரதிபலிக்கும் வகையில், அவரது குற்றச்சாட்டுகளுடன் ஒத்துப்போகும் வகையில், அமைந்திருப்பதை மறுக்க முடியாது.

கொரோனா சூழலைக் காரணம் காட்டி, இவ்வாறான அடிப்படை உரிமைகள், சுதந்திரம் என்பன நசுக்கப்படுகின்றன என்பது, ஐ.நா. பொதுச்செயலரினதும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினதும் உரைகளின் பிரதான அம்சமாக இருப்பதை கவனிக்க முடிகிறது.

“அண்மைக்காலமாக ஜனநாயக கொள்கைகள் புறக்கணிக்கப்படுதல், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், சிவில் சமூக இடைவெளி மட்டுப்படுத்தப்படுதல், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையின சமூகத்தவர் மீதான மீறல்கள் உள்ளடங்கலாக, உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன” என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்.

இந்த விடயங்கள் அத்தனையும் இலங்கை தொடர்பாக அண்மையில் வெளியாகிய மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகள் அனைத்திலும் காணப்படுகின்றன. அவரது இந்த அறிக்கை வெளியாகிய சமகாலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படங்களை டிக்டொக்கில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர், வத்தளையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, கிளிநொச்சியிலும், தொலைபேசியில் பிரபாகரனின் படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தீவிரவாதத்தை ஊக்குவித்தல் என்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான விடயங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்காது என்பது அரசாங்கத்துக்கும் தெரியும், பொலிஸாருக்கும் தெரியும்.

ஆனாலும், பயங்கரவாத தடைச்சட்டம் ஏவி விடப்படுகிறது. நாட்டில் ஜனநாயக வெளி சுருங்கி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், உரிமை என்பன நசுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமே, பொருத்தமற்றது என்றும், மனித உரிமைகளை மீறுகின்ற ஒன்று எனவும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/