கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக குறித்த வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்படலாம் என்றும் அவர் கூறினார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பானது பெப்ரவரி 25 அன்று வெளியிடப்பட்டது.

ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.