5 இலட்சம் பேருக்கு கோவிஷீல்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் பாரிய பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

தரவுகளின் அடிப்படையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் ஒரு நபருக்கு கொரோனா வைரஸிலிருந்து 76 சதவீத பாதுகாப்பை அளிக்கின்றது என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மருத்துவ சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் தனுஷா தாசநாயக்க இதனைக் கூறினார்.

இரண்டாவது டோஸ் முழுமையாக ஒரு நபருக்கு பாதுகாப்பினை அளிக்கும் என்றாலும், முதல் டோஸிலிருந்து ஒரு நபருக்கு ஒருவித பாதுகாப்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் முதல் டோஸ் செலுத்தப்பட்டதன் பின்னர் 10-12 வாரங்களில் கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.