ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலியாவோ எரிமலை எரிப்பு குழம்பை வெளியேற்றி வருகிற நிலையில் அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஆலிசன் டீல் என பெண் கடலில் அலையில் நீர் சறுக்கு பலகையின் மீது ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும்  லாவா குழப்பிற்கு மிக அண்மையிற்கு சென்று வந்துள்ளார்.

கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் அதன் அருகிற்கு சென்று திரும்பிய ஆலிசன்  அதை தனது பேஸ்புக்கிலும் பதிவேற்றியுள்ளார்.

ஆலிசன் டீலின் இத்துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் படம்பிடித்துள்ளார். ஆலிசன் டீல்  பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் பெல்ஹர்ட்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.