கொழும்பு, டாம் வீதி பகுதியில் பயணப் பையொன்றினுள் அடைக்கப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என அடையாளம் காணப்பட்ட பொலிஸ் அதிகாரி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்வதற்காக சந்தேக நபரின் குடியிருப்புப் பகுதியான படல்கும்புரவுக்கு பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பொலிஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, அவர் வனப் பகுதியை நோக்கி புறப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேக நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் வறினார்.

இதன்போது அவரது உடலுக்கு அருகில் விஷப் குப்பியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.