வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.

நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றும் தங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சுகாதார தொண்டர்களுக்காண நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று நிர்கதியாக நிற்கும் சுகாதார தொண்டர்களாகிய தங்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு  பல தடவைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் எந்தவதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் என்றும் தமக்கு உண்மை நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் தமக்குரிய நியமனத்தை வழங்க வலியுறுத்தி ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று  முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துளமை குறிப்பிடத்தக்கது.