நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கொழும்பு 15 ஐ சேர்ந்த 87 வயதான பெண் ஒருவர், கொழும்பு - 5 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு 15 ஐ சேர்ந்த 78 வயது பெண், பிலியந்தல  பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண், பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண், கொழும்பு  2 ஐ சேர்ந்த 63 வயது ஆண், கலேவெல பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் உட்பட 7 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.