(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தை அண்மித்துள்ளது. எனினும் கடந்த சில தினங்களாக இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

2 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு 10 மணி வரை 317 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 83 869 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 80020 பேர் குணமடைந்துள்ளதோடு , 3209 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை 5 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளது.