பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த ஐந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை கைதுசெய்துள்ளதாக பங்களாதேஷ் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நாட்டின் வடக்கு பகுதியில் இருந்து தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொள்வதற்காக டாக்காவுக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்  என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீவிரவதாதிகள் ஐ.எஸ் தீவிரவாத குழுவுக்கு ஆதரவளிக்கும் ஜமாட்-ஹுல்-முஜஹீடீன்  தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்ப்பட்டுள்ளது.