(செ.தேன்மொழி)

சீதுவ - கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க பகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து குழல் 12 ரக துப்பாக்கி , அதன் 41 தோட்டாக்கள் , 25 வெற்றுத் தோட்டாக்கள் , குழல் 6 துப்பாக்கி தோட்டாக்கள் மூன்று , வாயு பிஸ்டோல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.