பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அரசாங்கம்

By T Yuwaraj

02 Mar, 2021 | 03:24 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் சில தினங்களில் இறுதி தீர்மானம் வழங்கப்படும். அதற்கான துரித செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பல பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது வெவ்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

எவ்வாறிருப்பினும் தற்போது 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.

இது சுமார் 10 வருடங்கள் காணப்பட்ட பிரச்சினையாகும். எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 10 - 15 நாட்களில் இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்பதை தெளிவாகக் கூறுகின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் முற்போக்காக செயற்படுவோம். துரிதமாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right