இந்தியாவில் குஜராத்தில் நாகப்பாம்புடன் செல்பி எடுத்துக்கொண்ட இளைஞருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள வதேரா நகரை சேர்ந்தவர் இளைஞர் யாஷிஷ் பரோட்  சில தினங்களுக்கு முன்னர் கண்ணாடி குவளையொன்றில் நாகப்பாம்புவை அடைத்து வைத்து அதனுடன் செல்பி எடுத்துள்ளார்.

குறித்த செல்பியிலுள்ள நாகப்பாம்பு 1,000 ரூபாவிற்கு நாகப்பாம்பு விற்பனைக்கு உள்ளது' என தலைப்பிட்டு பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். சில தினங்களில் இந்த புகைப்படத்திற்கு 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் வந்துள்ளன.

இந்திய வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி நாகப்பாம்பு பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் என்பதால், அதனை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.