இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் 'கமட பிட்டியக்' தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

இதன் அங்கூரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 332 கிராமப்புற விளையாட்டு மைதானங்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்பதுடன் இது தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுத் திறனுக்கான பங்களிப்பையும் அளிக்கிறது.