-ஹரிகரன்

“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகப் பெரியளவிலான வரவேற்பு இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் கொழும்பில் கிடைத்திருக்கிறது”

“பாகிஸ்தான்- இலங்கை தலைவர்களும், தூதுவர்களும் சந்தித்துக் கொண்டால் தமிழீழ விடுதலைப், புலிகளை அழிக்க உதவியதை இரண்டு தரப்பினரும் நினைவுபடுத்திக் கொள்வார்கள். இலங்கை – சீன தலைவர்களோ, இலங்கை – இந்தியா தலைவர்களோ சந்தித்துக் கொள்ளும்போது, எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த விடயத்தை நினைவு கூருவது கிடையாது”

Note:-03 ஜெனிவாவில் இலங்கையைப் பிணையெடுக்கத் துணை நிற்கும் பாகிஸ்தான், தன்னை ஒரு இஸ்லாமிய நாடு என்று கூறிக் கொண்டாலும், இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் என, ஆசியாவின் மூன்று அணுசக்தி வல்லமை கொண்ட அரசுகளுக்கும், இந்தப் பிராந்தியத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறுபான்மை சமூகங்களுக்கும் இடையில், சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. 

இவ்வாறான பின்புலத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கைப் பயணம் பூகோள அரசியலில் சிறுபான்மை இனங்களுக்கு முக்கியமான ஒரு படிப்பினையாகவும் அமைந்திருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகப் பெரியளவிலான வரவேற்பு கொழும்பில் கிடைத்திருக்கிறது. 

அதுவும் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன்தான் நடந்திருக்கிறது.

பாகிஸ்தான் விமானப்படையின் ஜெட் போர் விமானம் இந்திய வான் எல்லையைக் கடந்தே கொழும்புக்குப் பயணம் செய்தது.

இந்தியாவின் அனுமதி கிடைத்திருக்காவிட்டால், பாகிஸ்தான் விமானப்படை விமானம், இந்திய எல்லைக்குள் பறப்பது சாத்தியமே இல்லாமல் போயிருக்கும்.

இம்ரான் கான் சிறிலங்கன் விமான சேவை விமானத்தையே பயன்படுத்த நேர்ந்திருக்கும்.

இந்தியாவின் அனுமதியுடன் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய இம்ரான் கானுக்கு, அளிக்கப்பட்ட வரவேற்பு மிகப் பிரமாண்டமானது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கூட, இப்படியான வரவேற்பு அளிக்கப்படவில்லை. 

அரசாங்கத்தின் அத்தனை அமைச்சர்களும், பிரதமருடன் கூடியிருந்தனர்.

கொரோனா தொற்று காலத்தில் இப்படியான வரவேற்பு கிடைக்கும் என்று இம்ரான் கான் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

அவருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மாத்திரமன்றி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடந்து வரும், 46 ஆவது கூட்டத்தொடருக்கும்கூட, சம்பந்தம் உள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் பரம்பரை எதிரிகளாக இருந்தாலும், கொழும்புடனான உறவுகளில் இந்தியா அண்மை நாட்களாக ஒருவித வலியை எதிர்கொண்டிருந்தாலும், இம்ரான் கானின் பயணத்தை தடைசெய்ய முனையவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/