எம்எஸ்தீன் 

முஸ்லிம் கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் நகைப்புக்குரியதாகியுள்ளது. அவற்றின் அரசியலில் பொய்யும், புரட்டும், மோசடிகளும், முரண்பாடுகளும் நிறைந்தே உள்ளன. 

முஸ்லிம் கட்சிகளுக்குள் இத்தகைய நிலை நீண்;ட காலமாக இருந்தாலும், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததன் பின்னர் மிகவும் மோசமானதொரு பேசுபொருளாக முஸ்லிம் கட்சிகளின் அரசியல் மாறியுள்ளது.

கட்சியின் குருவாக இருக்கும் தலைவர்களும், சிஷ்யர்களாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அந்தந்தக் கட்சிகளுக்குள்ளே காணப்படும் உள்ளக முரண்பாடுகள் சூடேறிக் கொண்டிருக்கின்றன.

அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது. கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்திருந்தார்கள்.

ஆயினும், ஜனாஸா விவகாரத்தில் எந்தவொரு போராட்டத்தையும், அழுத்தத்தையும் கொடுக்காத நிலையிலேயே இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாகியுள்ளார்கள். 

அவர்கள் அரசாங்கத்துடன் வலிந்தேனும் இணைந்து செயற்படுவதற்கே விருப்பங்கொண்டுள்ளார்கள் என்பதே உண்மையாகின்றது.

மு.காவிற்குள் பிளவு?

மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸிற்குள் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளன. கட்சித் தலைவருக்கு எதிராக விரல் நீட்டியவர்கள் கட்சியை விட்டு விலக்கப்பட்டார்கள். 

marhif asraf

ஆயினும், சமூகத்திற்கு எதிராகவும், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராகவும் செயற்பட்டவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்பது அக்கட்சிப் போராளிகளின் மனக்கு முறலாக இருக்கின்றன.

தற்போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்களின் மூலமாக கடும் சொற்போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு அளித்த விடயத்தில் அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்பீடத்தில் தெரிவித்ததாக ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். 

அதேவேளை, அவர்கள் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளதாகவும் அவர்; தெரிவித்திருந்தார். 

ஆனாலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்பதற்கு தயாரில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/