குமுறத் தொடங்கியுள்ள இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை

By Vishnu

02 Mar, 2021 | 11:47 AM
image

இந்தோனேஷியாவின் மவுண்ட் சினாபுங் என்ற எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதுடன் செவ்வாயன்று 5 கிமீ (3.1 மைல்) உயரத்தில் சூடான சாம்பலை வான் நோக்கி வெளியேற்றியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட அதன் முதல் பெரிய வெடிப்பின் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் மவுண்ட் சினாபுங்கின் குமுறல் செயல்பாடு அதிகரித்துள்ளது. அதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் எரிமலை வெடிப்புக்கான எச்சரிக்கை மிக உயர்ந்த மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் ஒரு அதிகாரி முன்பு எரிமலையின் பள்ளத்திலிருந்து குறைந்தது 3 கி.மீ தூரத்திற்கு அப்பால் மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் ஆபத்து குறைப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா "பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படுகிறது, இது மிகவும் நில அதிர்வுக்குரிய மண்டலமாகும், அங்கு பூமியின் மேலோட்டத்தில் வெவ்வேறு தட்டுகள் சந்தித்து ஏராளமான பூகம்பங்கள் மற்றும் எரிமலைகளை உருவாக்குகின்றன.

இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 130 எரிமலைகள் செயற்பாட்டில் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை...

2022-12-02 16:51:35
news-image

கடுமையான கொவிட்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கைவிடுகின்றதா சீனா?

2022-12-02 16:06:09
news-image

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புட்டினை சந்திக்க...

2022-12-02 15:22:57
news-image

தென் ஆபிரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம்: பொறியியல்...

2022-12-02 14:46:27
news-image

புலம்பெயர்ந்தவர்களால் இந்தியாவுக்கு இவ்வருடம் 100 பில்லியன்...

2022-12-02 13:20:58
news-image

இந்திய கடலோர காவல்படையில் நவீன எம்.கே.3...

2022-12-02 12:50:38
news-image

ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத்...

2022-12-02 12:46:26
news-image

ஐஎஸ் அமைப்பின் நெய்ல் பிரகாஸ் துருக்கியிலிருந்து...

2022-12-02 12:17:51
news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி :...

2022-12-02 13:45:14
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10