யாழ்ப்பாணம்  மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாகிய 23 வயதுடைய பெண், திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், வாடகைக்கு வீடு எடுத்து மணியந்தோட்டத்தில் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 இந்நிலையில், அவர் வசிக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டுள்ளதுடன் தாயாரையும் கைது செய்துள்ளனர்.||

விசாரணைகளை பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவர் குவைத்தில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில், அவர் பிள்ளையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொளியாக பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.