ஷானகவின் அமெரிக்க விசா சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர்

Published By: Vishnu

02 Mar, 2021 | 11:00 AM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் சலகதுறை ஆட்டக்காரரான தசூன் ஷானக மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தவறிய சம்பவம் குறித்த விசாரணைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான தனது போக்குவரத்து விசாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணாகவே ஷானவினால் இலங்கை கிரிக்கெட் அணியின் ஏனைய வீரர்களுடன் இணைந்து மேற்கிந்தியத்தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தில் பங்கெடுக்க முடியாது போனது.

உரிய நேரத்தில் தனது விசாவைப் பெறுவதற்கான செயல்முறை தாமதமானதால், பெப்ரவரி 23 அன்று மேற்கிந்தியத்தீவுகளுக்கு புறப்படும் வாய்ப்பினை அவர் தவறவிட்டார்.

அவரது விசா பிரச்சினை இன்னும் இலங்கை கிரிக்கெட்டால் தீர்க்கப்படவில்லை, இதற்கிடையில் மார்ச் 3 ஆம் திகதி அன்டிகுவாவில் இலங்கை மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த இருபதுக்கு : 20 தொடரை தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்பு முன்னதாக ஷானக்கவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய நிலைமைகள் காரணமாக அந்த பொறுப்பு அஞ்சலோ மெத்தியூஸிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49