( சி.அ.யோதிலிங்கம் )
ஐ.நா. மனித உரிமைகள்பேரவையில் ஆறு நாடுகள் கூட்டாக 46ஃ1 என்ற பெயரில் புதிய பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. அந்தப்பிரேரணையை “புதிய மொந்தையில் பழையகள்” என்பதை விட “புதிய மொந்தையில் பல நாள் புளிச்சகள் எனலாம்” தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவையும் அதில் உள்ளடக்கப்படவில்லை. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களும் பிரேரணைக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது. முன்னைய பிரேரணைகளை விடமி கப் பலவீனமான பிரேரணையாக இது உள்ளது.
புதிய பிரேரணையில் குறிப்பிடத்தக்கதாக எதுவும்இல்லை. வலுவான அழுத்தங்களும் இல்லை.15 அவதானிப்புக்களும் 16 பரிந்துரைகளும் அதில் உள்ளன. பரிந்துரைகளில் நல்லாட்சிக்காலம் புகழப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம்,இழப்பீடுகளுக்கான அலுவலகம் மேற்கொண்ட முன்னேற்றங்கள் பாராட்டப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்கள் அவர்களின் கண்களில் படுவதற்கும் விசேட நுணுக்குக்காட்டிகள் அவர்களிடம்இருக்கின்றது என கருதவேண்டியுள்ளது.
அரசாங்கத்தினதும் புலிகளினதும் மனித உரிமை மீறல்களை ஆராய்வதற்கு பரந்துபட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தொடர்ச்சியாக தண்டனை வழங்கப்படாத நிலமை நீடிக்கின்றது எனவும் கூறப்பட்டுள்ளது. இவற்றைவிட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தல், மனித உரிமை ஆணைக்குழுவை சுயாதீனமாகச் செயற்பட விடுதல், காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு பணிகயம் என்பவற்றை சுயாதீனமாக செயற்பட விடுதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்தல், மதச்சுதந்திரம், பன்மைத்துவம் என்பவற்றை ஊக்குவித்தல், இலங்கையின் நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்தல் என்பன உள்ளடங்கியிருக்கின்றன.
அதேவேளை 15 பரிந்துரைகளில் அவதானிப்புக்களும் கூறப்பட்டுள்ளன. எவையெல்லாம் இராஜதந்திர பாராட்டுக்களே. தமிழ் மக்கள் மகிழ்ச்சிப்படத்தக்கதாக எதுவுமில்லை. தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்ற விவகாரங்களில் பெரிய கவனம் செலுத்தப்படவில்லை.இலங்கை முழுவதற்குமான மனித உரிமை விவகாரங்களிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கும் கூட தமிழ் மக்கள் மனித உரிமை விவகாரங்களுக்கும்,கட்டமைப்பு சார் இன அழிப்பு விவகாரங்களுக்கும் அண்மைக்காலமாக கடுமையாக முகம் கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள், தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்கள், படையினரின் காணிப்பறிப்பு, அரசியல் கைதிகளின் விவகாரம்என்பன பற்றி எதுவும் கூறப்படவில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-3
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM