(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திர கட்சி புறக்கணிக்கப்படுவதாக  அக்கட்சியின் சிரேஷ்ட  உறுப்பினர் குறிப்பிடுவது அடிப்படை தன்மையற்றது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான அறிக்கையை கொண்டு சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களின் பேச்சுக்கள் வெறுக்கத்தக்க வகையில் காணப்படுகிறது.  

கூட்டணியின் சகோதர கட்சி என்ற ரீதியில் கூட்டுப் பொறுப்புடன் இவர்கள் செயற்படவேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அறிக்கையைகொண்டு சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களிள் கருத்துக்கள் வெறுப்பூட்டும்  தன்மையில் காணப்படுகிறது.

கூட்டணியின்  சகோதர கட்சி என்ற அடிப்படையில் அனைத்து சகோதர கட்சிகளும் கூட்டு பொறுப்புடன் செயற்படவேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திர கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குறிப்பிட்டுள்ளமை அடிப்படை தன்மையற்றது. கூட்டணியின் பங்காளி கட்சிகள் அனைவருக்கும் உரிய அந்தஸ்த்து தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் அறிக்கை சுயாதீனமற்றது என ஆணைக்குழுவை ஸ்தாபித்தவர்கள் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. 

ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளில் அரசியல் அழுத்தங்கள் ஏதும் இடம் பெறவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட முடியும். சுதந்திர கட்சியினர் கூட்டு பொறுப்புடன் செயற்படுவது சிறந்ததாக அமையும் என்றார்.