கொரோனாவால் இன்று 5 மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

01 Mar, 2021 | 09:18 PM
image

நாட்டில் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் கனேமுல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர்,  கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், 2021 மார்ச் மாதம் 01 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

கொவிட் நியூமோனியா மற்றும் சிறுநீரகத் தொகுதி புற்று நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பு 10 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர நீரிழிவு நோய் நிலைமையே  மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆண் ஒருவர், கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கண்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 61 வயதுடைய ஆண் ஒருவர், பேராதெனியா போதனா வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

பூஜாபிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மார்ச் மாதம் 01 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் இதயம் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33