(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட கிராமிய விளையாட்டு மைதானங்கள் 332 க்கான அபிவிருத்திப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (02) கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் ரவிந்திர சமரவிக்ரம தெரிவித்தார்.

Army Cricket Ground, Chennai | Photo | Global | ESPNcricinfo.com

நாட்டைக் கட்டி எழுப்பும் ஒளிமயமான நோக்குடன் அரசாங்கத்தின் கொள்கை திட்டத்திற்கு அமைவாக சக்திமிக்க  தலைமுறையினரை  உருவாக்குவதன் தேசிய பொறுப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஒன்றிணைந்து கிராமிய விளையாட்டு மைதானங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஒரு செயலகப் பிரிவிலிருந்து ஒரு மைதானத்தை தெரிவு செய்துள்ளதுடன், ஒரு மைதானத்துக்காக 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 332 கிராமிய மைதான அபிவிருத்திப் பணிகளுக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடானது மாவட்ட செயலாளர் ஊடாக பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குறித்தவேலைத்திட்டமானது உள்ளூராட்சி மன்றங்கள் மூலமாக செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.