வைகைப்புயல் வடிவேலு கதாநாயகனாக நடத்து வெளிவந்த எலி படத்திற்கு பின் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்து வருகின்றார்.
சுராஜ் இயக்குத்தில் விஷால் கதாநாயகனானவும், கதாநாயகியாக தமன்னா நடிக்கும் ‘கத்தி சண்டை’யில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு மற்றும் சூரி நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கின்றனர். ‘எலி’ படத்தில் கதாநாயகனாக நடித்ததை தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் மூலம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கியுள்ள வடிவேலு, இப்படத்தில் தீவிரமான ஒரு மனநல வைத்தியராக நடிக்கிறார். இவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘டாக்டர் பூத்ரி’ என்பதாகும்.
இப்படம் குறித்து இயக்குனர் சுராஜ் கூறும்போது,
‘‘விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டை காட்சிகளுக்காகவும் கலை இயக்குனர் உமேஷ் குமார் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. முதல் பாதியில் சூரியும் இரண்டாம் பாதியில் வடிவேலுவும் நகைச்சுவையில் கலக்குவார்கள். இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது’’ என்றார்.
இப்படத்திற்கு ஹிப் பாப் தமிழா ஆதி இசையமைக்கின்றார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி எழுதுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM