(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இரவு 10.30 மணி வரை 303 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 83 545 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 79 422 பேர் குணமடைந்துள்ளதோடு , 3542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றையதினம் 5 கொரோனா மரணங்களும் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 7 கொரோனா மரணங்களும் பதிவாகின. அதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளது.