இயற்கையான வாய்ச் சுகாதார பராமரிப்பு தீர்வுகளுக்கான தேவை தினமும் மிகப் பாரிய அளவில் அதிகரித்து வரும் ஒரு விடயமாக காணப்படுகிறது.

மக்கள் முன்னரை விட, தங்கள் உடல்நலம் குறித்து தற்போது அதிக அக்கறை காட்டுகின்றனர். எந்தவொருவரினதும் ஆரோக்கியமான வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சங்களில் வாய்ச் சுகாதாரம் முதன்மையாகக் காணப்படுகின்றது. 

ஆயினும், இயற்கையான மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் பற்பசையானது, எப்போதும் வியக்க வைக்கும் அதிகளவான சுகாதார நன்மைகளைத் தருகிறது.

அந்தவகையில் க்ளோகார்ட் தனித்துவமானது என்பதுடன் மிக முக்கியமாக கிராம்பு எண்ணெய் உள்ளடங்கிய இயற்கையான மூலப்பொருட்களால் அது தயாரிக்கப்படுகிறது.

பாரம்பரிய இலங்கை மருத்துவத்திற்குள் அதன் வேர்கள் ஆழமாக பதியும் வகையிலான, அனைத்து வாய்வழி சுகாதார நோய்களுக்கும் முழுமையான தீர்வாக அது காணப்படுகின்றது.

க்ளோகார்ட்டின் பிரதான மூலப்பொருளாக, கிராம்பு எண்ணெய் காணப்படுகிறது. இது இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வளரும் கிராம்பு செடியிலிருந்து எடுக்கப்படுகிறது.

கிராம்பின் மருத்துவ நன்மைகளை ஆராயும்போது, அது பாரம்பரிய இலங்கையர்களின் குடும்பத்தின் நினைவுகளை மெல்ல தூண்டுகிறது.

அந்த வகையில், நம் முன்னோர்கள் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக சிக்கலற்ற வாழ்க்கை முறைகளை தேர்ந்தெடுத்து வாழ்ந்ததோடு, இயற்கை வைத்தியங்களை ஆராய்வதற்கு போதுமான நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டனர்.

அந்த வரிசையில் பல தலைமுறைகளாக பற்களில் ஏற்படும் பிரச்சினைகளைப் போக்குவதற்கான நிவாரணியாக கிராம்பு பயன்படுத்தப்படுகிறது.

பல் வலிக்கான வீட்டு வைத்திய தீர்வான கிராம்பை, இலங்கையர்கள் வலியைப் போக்குவதற்காக பல்வேறு வழிகளில் பயன்படுத்தினர். ஒரு கிராம்பை மெல்லுவதன் மூலம் பல் வலியின் போது, முதன்மையானதும், உடனடியானதுமான வீட்டு வைத்திய தீர்வை பெறலாம்.

அது மாத்திரமன்றி, பற்களில் துவாரங்கள் ஏற்படுவதற்கு எதிரான சிறந்த பாதுகாப்பானாக, கிராம்பு கருதப்படுவதோடு, ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளை கொண்ட பற்களை பராமரிக்கவும் உதவுகிறது.

கிராம்பு எண்ணெயின் மருத்துவக் குணம் யாதெனில், நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் காரணமாக இது இயற்கையான பக்டீரியா கொல்லியாகவும் வலி நிவாரணியாகவும் கிருமி கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு எண்ணெயினால் நிறைந்திருக்கும் க்ளோகார்ட், அதனை பயன்படுத்துவோரின் பற்களில் குழிகள் உருவாவதற்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதோடு, உறுதியான பற்களை உறுதிப்படுத்தும் வகையில் கிருமிகளுக்கு எதிராக போராடுவதோடு பல் மிளிரியையும் பலப்படுத்துகிறது.

சிறந்த வாய் சுகாதாரம் மற்றும் சுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட தரக்குறியீடான க்ளோகார்ட், இலங்கையர்களின் வீடுகளிலுள்ள ஒரு அங்கமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.

உடல் நலம் மற்றும் மக்களின் நல்வாழ்வு குறித்த அயராத அதன் பிரதான அக்கறை காரணமாக, இலங்கையில் அது ஒரு முன்னணி பற்பசை நாமமாக தொடர்ந்தும் முன்னோக்கி தனது பயணத்தை தொடர்கிறது.

மூலப்பொருட்கள் முதல் உற்பத்திச் செயன்முறை, பொதியிடுதல் வரை க்ளோகார்ட் ஆனது அனைத்து விடயங்களிலும் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதில் மிக அவதானத்துடன் செயற்படுவதுடன் விலைமதிப்பற்ற பற்களைப் பாதுகாக்கும் பொருட்டு இயற்கையான மூலப்பொருட்களின் மதிப்பையும் ஊக்குவிக்கிறது.

1992ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட க்ளோகார்ட், சுமார் மூன்று தசாப்தங்களாக இலங்கையர்களின் நம்பிக்கையை வென்றுள்ள வாய்ச் சுகாதார பராமரிப்பு தரக் குறியீடாக இருந்து வருவதுடன் க்ளோகார்ட் மீதான நம்பிக்கையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இன்றைய நிலையில் க்ளோகார்ட்டை முதன் முறையாக பயன்படுத்தியவர்கள் முதல், பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் கிராம்பு மற்றும் க்ளோகார்ட் தொடர்பான தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, இயற்கை கிராம்பின் சக்தி கொண்ட க்ளோகார்ட்டின் பெறுமதி தொடர்பில் தங்கள் நம்பிக்கையை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறார்கள்.

ஒரு காலத்தில் கிராம்பைப் பயன்படுத்திய குடும்பங்கள், தங்கள் ஆரம்ப காலத்திற்கு திரும்புவதற்கான ஒரு வழியாக க்ளோகார்ட்டைத் தொடர்ந்து பயன்படுத்துவதோடு இயற்கையான மூலப்பொருள் சக்தி கொண்ட பற்பசையுடன் தங்கள் வாய்ச் சுகாதாரத்தைப் பேணி வருகின்றனர்.