(எம்.மனோசித்ரா)

இலங்கை விமானப்படை தனது 70 வது ஆண்டு நிறைவை நாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையுடன் இந்திய விமானப்படையும் இணைந்து கொழும்பு - காலி முகத்திடலில் கண்காட்சி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளன. விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பதிரணவின் கண்காணிப்பின் கீழ்  விமானப்படை ஆண்டு நிறைவு கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No description available.

இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் இந்திய விமானப்படையும் பங்குபற்றவுள்ள நிலையில் , நாளைய கண்காட்சியில் 23 இந்திய விமானங்கள் பங்கேற்கவுள்ளன. 

இலங்கை - இந்தியாவுக்கிடையிலான  பல ஆண்டுகால நெருக்கமான நட்புறவின் அடிப்படையில் , இந்திய விமானப்படையும் கடற்படையும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளன என்று இது  இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

No description available.

அத்தோடு 70 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விமானப்படை அதிகாரிகள் 467 பேரும் , ஏனைய 7290 விமானப்படையினருக்கும் பதவி உயர்வு வழங்பட்டுள்ளது. 

1951 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி 6 அதிகாரிகள் , 21 வீரர்களுடன்  இலங்கை விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No description available.No description available.No description available.No description available.No description available.No description available.No description available.