தலவாக்கலை - சென்.கிளயர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

தலவாக்கலை - சென்.கிளயர் வனப்பகுதி நேற்று (28.02.2021) இரவு 7 மணி முதல் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர்.

எனினும், தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தீ வேகமாக பரவி சுமார் 30 ஏக்கர் வரை தீக்கிரையானது.

மனித செயற்பாடு மூலமே இத்தீப்பரவல் ஏற்பட்டிருக்கும் என சந்தேகிக்கும் பொலிஸார், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.