மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் முயற்சியா ? மரிக்கார் கேள்வி

Published By: Digital Desk 4

01 Mar, 2021 | 04:26 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் , அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை காலம் தாழ்த்தி மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிப்படுகிறதா என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார்.

ஜெனிவா நெருக்கடியிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது -  எதிர்க்கட்சி | Virakesari.lk

கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரும் இரு மாதங்களாக கட்டாய தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

எனவே இந்த தீர்மானம் மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடல விவகாரத்தில் பல வேறுபட்ட கருத்து முரண்பாடுகளின் பின்னர் சுகாதார அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னர் தற்போது சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொவிட் சடலங்கள் தொடர்பில் ஆராயும் நிபுணர்கள் குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு இரு மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

அந்த அறிக்கையில் இந்த விடயமும் கூறப்பட்டு;ள்ளது. அவ்வாறெனில் இரண்டு மாதங்களாக பொறுத்தமான இடத்தை தேர்ந்தெடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

தெமட்டகொட - குப்பியாவத்தை மயானம் இதற்கு தகுந்த இடமாகும் என்று பேராதனை பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது.

குறித்த மயானம் மருதானை பள்ளிக்கு சொந்தமானதாகும். இங்கு கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மருதானை பள்ளி விருப்பம் தெரிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறிருக்கையில் இந்த தீர்மானத்தை மேலும் காலம் தாழ்த்துவதன் மூலம் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கிறீர்களா?

டிசம்பர் 28 ஆம் திகதி நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரும் இரு மாதங்களாக கட்டாய தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே இந்த தீர்மானம் மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32