ஆர்.ராம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வு இம்முறை மெய்நிகர் வழியில் நடைபெற்று வருகின்றது. பெப்ரவரி 22இல் ஆரம்பித்து மார்ச் 19இல் நிறைவடைவதாக கூறப்பட்டாலும் தற்போது காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது. 

அமர்வின் காலம் எவ்வளவு தூரம் நீடிக்கப்பட்டாலும் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமைக்காக நீதிகோரி காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை என்ற நிலையே ஏற்பட்டிருக்கின்றது. 

2012ஆம் ஆண்டு முதல் ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அன்று முதல் வடக்கு கிழக்கில் இருந்து அரசியல், சிவில், நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்புக்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் என்று ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு அமர்வுகளுக்கும் படையெடுப்பது வழமையானது. 

குறிப்பாக 2015ஆம் ஆண்டின் பின்னரான நிலைமையில் இதுவொரு ‘பருவகால நிகழ்வாக’ மாறியிருந்தது. ஆனால் 2019இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மீண்டும் ஐ.நா.மீதான எதிர்பார்ப்புக்களை வெகுவாக அதிகரிக்கச் செய்திருந்தது. 

பொறுப்புக்கூறல் விடயத்திற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய  ராஜபக்ஷவினர் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தமை, ராஜபக்ஷவினருக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள், இந்தியாவுடனான  மோதல்கள், சிங்கள, பௌத்த தேசிய வாதத்தினை முன்னிலைப்படுத்திய ஆட்சி,  முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிரானதொரு ‘ஒழுங்கு படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல்’ செயற்பாடுகள்,  ஜனநாயக விழுமியங்களை மறுதலிக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள் என்று பட்டியல் நீண்டு சென்றமையாது  பாதிக்கப்பட்ட தரப்புக்களின் எதிர்பார்ப்புக்கள் வலுக்க அடிப்படைக் காரணமாகியது. 

 இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-7

 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/