ஜெனிவா ஏமாற்றமா?

By Gayathri

01 Mar, 2021 | 01:32 PM
image

-சுபத்ரா

“ஐ.நா. கட்டமைப்பின் ஊடாக நீதியைப் பெறுவது சாத்தியமில்லை என்றும், அவ்வாறு நீதி கிடைத்தால் அது எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டமாக இருக்கும்” -ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் சாள்ஸ் பெட்ரி

“ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை காட்டமானதாக இருந்தது. கடுமையான பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது. ஆனால், அவ்விடயங்களை இணை அனுசரணை நாடுகள் முழுமையாக தமது வரைவில் உள்வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது”

ஐ.நா.வினால்தான் நீதியைத் தரமுடியும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரவேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களும், பேரணி நடத்தியவர்களும் இப்போது, பொருமிக் கொண்டிருக்கிறார்கள். 

அனுசரணை நாடுகளின் குழுவினால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், முன்வைக்கப்பட்டுள்ள, தீர்மான முன்வரைவுதான் இதற்குக் காரணம்.

இந்தத் தீர்மான முன்வரைவு வழக்கத்துக்கு மாறான சில விடயங்களை உள்ளடக்கியிருந்தது. வழக்கமாக ஜெனிவாவில் உள்ளக கலந்துரையாடலின்போதுதான், முன்வரைவு கசிய விடப்படும்.

இம்முறைக் கூட்டத்தொடர் தொடங்க முன்னரே, அது கசிந்து விட்டது. மெய்நிகர் முறையில் நடக்கும் கூட்டம் என்பதால், இணைய வழியில் இந்த வரைவுப் பிரதி பரிமாறப்பட்டிருக்கலாம்.

வழக்கத்துக்கு மாறாக மிக நீண்டதாக மூன்றரைப் பக்கங்களில், இந்தப் பிரேரணை அமைந்திருக்கிறது. மின்னஞ்சலில் கசிந்த இந்த வரைவைப் பார்த்து பலரும் சந்தேகம் கொண்டமைக்கு இதன் நீளமும் ஒரு காரணம்.

இதற்கு அப்பால், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்படும்போது, இருக்கும் கடினத்தன்மை, அது இறுதி வரைவாக முன்வைக்கப்படும்போது இருப்பதில்லை. 

பெரும்பாலும், அது நீர்த்துப்போய்விடும். அவ்வாறு நீர்த்துப் போகச் செய்யும் பணியை முன்னெடுக்கவே இந்தியா போன்ற நாடுகள் ஜெனிவாவில் இருக்கின்றன.

ஆனால், இந்தமுறை தீர்மான வரைவு, நீர்த்துப்போன நிலையில்தான் முதலிலேயே முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இது ஆரம்ப தீர்மானத்தின் நிலையில் இருப்பதாக, சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார். 

இந்த வரைவில், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு விடயம், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் கண்காணிப்பைத் தொடரவேண்டும் என்பதும், மீறல்கள் தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை உயர்ஸ்தானிகர் பணியகம் உருவாக்க வேண்டும் என்றும் கோரியிருக்கும் விடயம்தான்.

மற்றவையெல்லாம் வழக்கமான வழவழப்பான விடயங்களாகவே உள்ளன. இவ்வாறான நீர்த்துப்போன தீர்மானம், தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனென்றால், அவர்கள் எதிர்பார்த்தது மிகப் பெரியளவிலான ஒரு பாய்ச்சலைத்தான். அந்த எதிர்பார்ப்பு உருவாக காரணம், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

அந்த அறிக்கையில், இனிமேலும் இலங்கை அரசு பொறுப்புக்கூறலைத் தாமதிக்க இடமளிக்கக்கூடாது என்றும், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது சொத்து முடக்கம், பயணத் தடைகளை அறிவிக்க வேண்டும் என்றும், போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை சேகரித்து ஆவணப்படுத்தும் பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் என்றும், பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்.

போர் முடிந்து 12 ஆண்டுகளாக நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படாமல் ஏமாற்றங்களையே சந்தித்து வந்த தமிழர் தரப்புக்கு, இந்த அறிக்கை ஆறுதல் அளிப்பதாக, அவர்களின் எதிர்பார்ப்புகளை அண்டி வருவதாக காணப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right