விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை விமானப் படையில் 467 அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 7,290 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70 ஆவது ஆண்டு நிறைவினை நாளை மார்ச், 2 ஆம் திகதி கொண்டாடவுள்ளது.

அதன்படி கொழும்பு, கட்டுநாயக்க உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விமானப் படை முகாம்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.